17 வயது சிறுமியை அண்ணன் முறையில் இருக்கும் இளைஞர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ள சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயிறு ரொம்ப வலிக்குது..! கதறிய தங்கை 4 மாத கர்ப்பம்..! காரணம் அண்ணன்..! கன்னியாகுமரியை அதிர வைத்த சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரசேரி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கருகே அமைந்துள்ள மணக்கரை கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் 19 வயதான சஞ்சீவ் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சஞ்சீவ் அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். சஞ்சீவ் கூறிய வார்த்தைகளை நம்பிய அந்த சிறுமி அவருடன் நெருங்கிப்பழக தொடங்கியுள்ளார். இந்த பழக்கத்தை தெரிந்துகொண்ட பெற்றோர் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளனர். பெற்றோரின் கண்டிப்பை மீறியும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பமானார். சிறுமி கர்ப்பமானதை தெரிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர் அவர்களை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சஞ்சீவ் தான் இதற்கு காரணம் என்று தெரிய வந்தவுடன் காவல்துறையினர் அவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி ஆசாரிபள்ளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.