2 மாதங்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்..! படுக்கையில் இருந்து கண்விழிக்காத விசித்திரம்! பரிசோதனை செய்த டாக்டர்களே அதிர்ச்சி!

2 மாதங்களாக இளம்பெண் ஒருவர் தொடர் தூக்கத்தில் இருந்து வரும் செய்தியானது கொலம்பியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொலம்பியா நாட்டில் 17 வயது இளம்பெண்ணான ஷாரிக் தோஹார் வசித்து வருகிறார். இவர் "கிளெயின்-லெவின்" (Klein-Levin) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் அவர் தொடர்ந்து 2 மாதங்களாக தூக்கத்திலேயே இருந்து வருகிறார். இவரை போன்றே உலகெங்கும் வெறும் 40 நோயாளிகளே தொடர் தூக்கத்தில் இருந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

மேலும், உணவு பொருட்களை திரவமாக மாற்றி, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அவருடைய தாயார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த முறை ஷாரிக் தொடர்ந்து 48 நாட்கள் தூங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் அனைத்தையும் மறந்து போனதாகவும், தன்னையே யார் என்று கேட்டதாகவும் அவருடைய தாயார் கூறியுள்ளார்.

தேசிய சுகாதார மையத்தில் இருந்து திரவ உணவுகளை கேட்டதாகவும், நரம்பியல் ரீதியான சிகிச்சைகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவருடைய தாயார் கூறியுள்ளார். ஆனால் கடந்த 2 மாதங்களாக தேசிய சுகாதார மையத்தில் இருந்து அவருக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இளம்பெண்ணின் வினோதமான நோயானது கொலம்பியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.