வகுப்புத் தோழியை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த கல்லூரி மாணவன்! அதிர வைக்கும் காரணம்!

புவனேஷ்வர்: காதலை ஏற்க மறுத்த 17 வயது பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டத்தில் தனியார் காலேஜ் ஒன்றில் படித்து வந்த 17 வயது பெண்ணை, குறிப்பிட்ட நபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலை அப்பெண் ஏற்க மறுத்துவிட்டார். கோபிநாத் காரா என்ற அந்த இளைஞர் தொடர்ந்து பலமுறை, இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த மே 31ம் தேதியன்று, அந்த இளைஞர், சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கே நேரில் வந்திருக்கிறார். திடீரென அப்பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துவிட்டு, அவர் தப்பியோடியுள்ளார். இதில், 50 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் போலீசில் சரணடைந்தார். ஒருதலைக்காதலால் இந்த விபரீதம் நேர்ந்துவிட்டதாக, அவர் போலீசில் கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.