தண்டவாளம் அருகே கிடந்த சடலம்! தாய் இறந்தது தெரியாமல் பால் குடிக்க மார்பகத்தை தேடிய குழந்தை! கண்களை குளமாக்கிய சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே உயிரிழந்த நிலையில் கிடந்த தாயின் சடலத்திற்கு அருகே அமர்ந்திருந்த குழந்தை தனது தாய் இறந்தது கூட தெரியாமல் பால் குடிக்க மார்பகத்தை தேடிய சம்பவம் காண்போரின் நெஞ்சங்களை பதைபதைக்க வைத்துள்ளது.


மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில் அமைந்திருக்கும் ரயில் தண்டவாளத்திற்கு அருகே பென் ஒருவரது சடலம் கிடந்துள்ளது. பெண்ணின் சடலத்திற்கு அருகே அவரது குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அழுது கொண்டிருந்த அந்த குழந்தை தன்னுடைய தாய் இறந்தது கூட தெரியாமல் பால் குடிக்க தனது தாயின் மார்பகத்தை தேடி அலைந்து உள்ளது. பின்னர் அங்கிருந்த மக்கள் ஓடி வந்து பார்த்த பொழுது உயிரிழந்த தனது தாயின் சடலத்திலிருந்து அந்த 17 மாத ஆண் குழந்தை பால் குடித்து கொண்டு இருந்ததை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மேலும் இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் நெஞ்சங்களை பதைபதைக்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.

உடனே அங்கிருந்த மக்கள் ரயில்வே காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது 17 மாத குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். காப்பகத்தில் சேர்ப்பதற்கு முன்பாக அந்த குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் குழந்தை சளியால் அவதிப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. அதற்கான உரிய மாத்திரைகளை மருத்துவர்கள் குழந்தைக்கு வழங்கியுள்ளனர்.

சளியை தவிர வேறு எந்த பிரச்சினையும் குழந்தையின் உடலில் இல்லை என்பது தெரிய வந்தவுடன் குழந்தையை பத்திரமாக காப்பகத்தில் அனுமதித்துள்ளனர். உயிர் இழந்த அந்தப் பெண் யார் என்றும் எந்த பகுதியை சேர்ந்தவர் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பற்றிய விவரம் தெரியும் வரை குழந்தை பத்திரமாக காப்பகத்தில் பாதுகாக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட அந்த பெண்ணின் காதுகள் மற்றும் மூக்கு பகுதியில் ரத்தம் வந்ததை காணமுடிகிறது. இதன் மூலம் அந்த பெண் ரயில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனையின் முடிவில் தான் சரியான காரணம் தெரியவரும் என போலீசார் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.