ஓரமாக நின்று கொண்டிருந்த கார்! திடீரென வந்த 17 அடி நீள பாம்பு! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

வேகமாக சென்று கொண்டிருந்த காரை விரட்டி சென்று மலைப்பாம்பு ஏற முயன்ற சம்பவமானது தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரம் என்று டர்பன் நகர் அழைக்கப்படுகிறது. நேற்று இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகுதியாக வந்திருந்தனர். படகு சவாரி செய்ய வேண்டும் என்பதற்காக படகினை தங்கள் வாகனங்களின் மூலம் இழுத்து சென்றனர்.

அங்கிருந்த புதருக்கு அடியில் 17 அடி உயரம் மலைப்பாம்பு இருந்தது. அப்போது சுற்றுலாவுக்கு வந்த நபர்கள் ஒருவர் அந்த மலைப்பாம்பை விரட்டியடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த மலைப்பாம்பு பின்னால் நின்று கொண்டிருந்த கார் மீது ஏற முயற்சித்தது.

ஆனால், அந்த காரை ஓட்டிய நபர் தக்க சமயத்தில் காரை பின்னுக்கு தள்ளினார். அப்போதும் விடாமல் அந்த மலைப்பாம்பு காரை துரத்தி கொண்டே சென்றது. காரை ஓட்டிய நபர் விடாமல் ஓட்டிக்கொண்டிருந்தால் மலைப்பாம்பால் காரின் மீது ஏற இயலவில்லை.

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் புதருக்குள்ளே உள்ளே சென்று பதுங்கியது. இந்த சம்பவமானது டர்பன் கடற்கரையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.