16 வயது சிறுமிக்கு போதை ஊசி ஏற்றி பலருக்கு விருந்தாக்கிய சென்னை தம்பதி! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

சென்னை உத்திரமேரூர் பகுதியில் சிறுமியை வீட்டு வேலைக்காக அழைப்து வந்து கட்டாயப்படுத்தி பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.


காவல் நிலையத்தில் அந்தப் சிறுமியின் பெற்றோர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி எங்கள் பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி, அற்புதராஜ் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து, எங்களின் 16 வயது மகளை சென்னையில் உள்ள தங்களது வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பி வைக்குமாறு கேட்டனர்.நாங்கள் மறுத்தோம். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து வற்புறுத்தியதால் மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தோம்.

இந்நிலையில் பண்டிகைக்கு மகளை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு செல்போனில் தொடர்புகொண்டு கேட்டோம். ஆனால் அனுப்பி வைக்கவில்லை. இதனால் கடந்த 19ம் தேதி நேரில் சென்று, மகளை வீட்டிற்கு அழைத்து வந்தோம். திருவிழா முடிந்து 2 நாட்கள் கழித்து மீண்டும் மகளை அழைத்து செல்ல அவர்கள் வந்தனர். அவர்களுடன் செல்ல மறுத்து எங்களது மகள் கதறி அழுதாள்.

இதுபற்றி மகளிடம் கேட்டபோது, கோனேரிகுப்பம் வீட்டில் வைத்து தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து அவள் கூறி அழுதாள். இதுபற்றி ஏன் எங்களிடம் சொல்லவில்லை என்று கேட்டதற்கு, ‘வெளியே சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம்’ என்று வேளாங்கண்ணியும், அற்புதராஜூம் மிரட்டியதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, அதில் எங்களது மகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு எங்களது மகள் மறுத்ததால், போதை மாத்திரை மற்றும் மயக்க ஊசி செலுத்தி என் மகளை சுய நினைவை இழக்க செய்து இரவும் பகலுமாக பலரை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுமைக்கு காரணமான அற்புதராஜ், வேளாங்கண்ணி மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய அற்புதராஜை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேளாங்கண்ணி கைது செய்யப்பட்டுள்ளார்.