துப்பாக்கி முனையில் இளம் பெண் ஆடைகளை களையச் செய்த கொடூரன்! பிறகு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

துப்பாக்கி முனையில், 16 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள பாபிஷா என்ற கிராமத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். 

அதில், ''கபில் என்ற நபர், எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, எனது 16 வயது மகளை துப்பாக்கி முனையில் மிரட்டி ஆடைகளை களையச் செய்துள்ளான். பின்னர் அந்த பெண்ணை கதற கதற பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விசயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் எனவும் அவர் மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட என்னுடைய பெண், வீட்டில் சுயநினைவின்றி கிடந்தார். அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்,'' என வலியுறுத்தியுள்ளார். இதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதற்கிடையே, முசாஃபர்நகர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை ஒரு நபர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிடியோடியுள்ளான். இதுபற்றி அடையாளம் தெரியாத அந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். தொடரும் பாலியல் கொடூரங்கள் பெண்களை பெற்றவர்களை அதிர வைக்கிறது.