முதல் காதலனின் நண்பனை புதுக் காதலன் ஆக்கிய 16 வயது சிறுமி! நம்பி சென்றவருக்கு 4 பேரால் ஏற்பட்ட விபரீதம்!

16 வயது சிறுமியை காட்டிற்குள் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


விளாத்திகுளம் அருகே வடக்கு செவல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

சில மாதங்கள் கழித்து சுரேஷ்குமாரின் நண்பரான ராமலிங்கம் என்பவரை அந்த சிறுமி காதலிக்க தொடங்கி உள்ளார். 2 தினங்களுக்கு முன்னர் ராமலிங்கம் தன்னுடைய காதலியை அழைத்து கொண்டு, வேம்பார் ரோடு அருகே காட்டுப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே அந்த சிறுமி காதலித்த சுரேஷ்குமார், அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் இருந்தை பார்த்து சிறுமி அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் 16 வயது சிறுமியை மிரட்டி 4 பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து சிறுமி மயக்கம் அடைய அதிர்ச்சி அடைந்த 4 பேரும் தண்ணீர் வாங்க கடைக்கு சென்றுள்ளனர். 

காட்டுப்பகுதியில் இளைஞர்களின் நடமாட்டத்தில் சந்தேகமுற்ற பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வரைந்த போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமி சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் அழகுராஜா, சுரேஷ்குமார், ராமலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். காதலன் ராமலிங்கம் உள்பட 4 பேரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.