40 நாள் குழந்தைக்கு தாயான 22 வயது நர்ஸ்! காரணம் 16 வயது டிக்டாக் சிறுவனாம்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

16 வயது இளைஞனை டிக்டாக் மூலம் மயக்கி செவிலியர் ஒருவர் கர்ப்பமாகியுள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் புகழ்பெற்ற தொழில்பயிற்சி மையமானது கிண்டியில் அமைந்துள்ளது. இங்கு தேனியை சேர்ந்த 16 வயது இளைஞன் ஒருவர் முதலாமாண்டு படித்து வந்தார். இவருடைய தந்தை துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டிக்டாக் மீது அளவில்லாத பிரியம். ஒரு நாளில் கிட்டத்தட்ட 10-15 வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவார்.

இந்நிலையில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இவர் மாயமாகியுள்ளார். இதனை தொடர்ந்து கிண்டி காவல் நிலையத்தில் அவர் காணவில்லையென்று புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கிண்டி காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக தெரிகிறது.

தகவல் தெரிந்தவுடன் துபாயில் இருந்த தந்தை இந்தியா வந்துள்ளார். மேலும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 3 முறை தாக்கல் செய்த காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்தை 4-வது முறையாக கிடுக்குபிடி போட்டு ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

நீதிமன்றமானதுபோலீசாரின் அலட்சியப்போக்கை கண்டித்து மாணவனை குறுகிய காலத்திலே கண்டுபிடித்து வர வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் பின்னர் இந்த வழக்கானது விறுவிறுப்பானது.

மாணவன் பதிவேற்றம் செய்த டிக்டாக் வீடியோக்களை ஊத்துக்குளி பகுதியை பூர்வீகமாக கொண்ட 22 வயதுசெவிலியர் ஒருவர் விரும்பி பார்த்துள்ளார். மேலும் இருவரும் பரஸ்பரமாக செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டனர். கொஞ்ச நாட்களிலேயே நெருக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. இதற்கிடையே அந்த பெண் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

விரக்தியடைந்த பெண் திருமணமான மூன்று நாட்களிலேயே சென்னை வந்து இளைஞரை சந்தித்துள்ளார். இளைஞர் வசதியானவர் என்பதை தெரிந்து கொண்ட செவிலியர் பல்வேறு சொகுசு ஹோட்டல்களில் உல்லாசமாக தங்கியிருந்தனர்.

இருவரும் பயன்படுத்திய செல்போன் ஐ.எம்.ஈ.ஐ நம்பர் மூலம் காவல்துறையினர் அவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். ஊத்துக்குளி பகுதிக்கு சென்றபோது அந்த பெண் பிறந்து 40 நாட்களேயான குழந்தையுடன் தங்கியிருந்தார். அப்போது இளைஞரும் அங்கு வந்தார். அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்த குழந்தைக்கு தங்கை இளைஞர் தான் என்பதை அறிந்தனர்.

3 பேரையும் பத்திரமாக அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 16 வயதேனதால் ஆள்கடத்தல் வழக்காக பதிவு செய்தார். மேலும் சின்னக் குழந்தையின் எதிர்காலம் கருதி இளைஞர் 5 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.