மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம்..! தூண்டில் போட்ட சிறுவன் கழுத்தில் பாய்ந்து குத்திய மீன்..! ஒரு பக்கம் குத்தி மறுபக்கம் வந்த விபரீதம்!

மீன் பிடிக்க சென்ற சிறுவனின் கழுத்தை பெரிய மீன் ஒன்று துளைத்த சம்பவமானது இந்தோனேசியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர் முகமது இதுல். இந்த இளைஞரின் வயது 16. இவர் நாட்டின் கடற்கரையில் மீன் பிடிப்பதற்காக பெற்றோருடன் சென்றுள்ளார். மீன் பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக கடலிலிருந்து பெரிய மீன் ஒன்று அந்த சிறுவனின் கழுத்தில் குத்தியுள்ளது. கழுத்து பகுதியில் குத்திய மீன் மறுபக்கத்திலிருந்து வெளியே தலையை நீட்டியுள்ளது. இதனால் பதறிப்போன இளைஞரின் பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனைக்கு சென்றவுடன் அந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 3 மருத்துவர்கள் மற்றும் 2 மயக்க நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீனை இளைஞரின் கழுத்திலிருந்து வெளியே எடுத்தனர்.  கழுத்து பகுதியில் முக்கிய ரத்தக்குழாய் பாய்வதால் மருத்துவர்கள் தொடர்ந்து இளைஞரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இளைஞருக்கு காய்ச்சல் குறையாத காரணத்தினால் தொடர்ந்து அபாயகரமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் இளைஞரின் பெற்றோர் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்படுகின்றனர். இளைஞரின் கழுத்தில் பாய்ந்த மீன், ஊசி மீன் என்ற வகையை சேர்ந்தது என்றும், இந்த மீன் ஒரு மணிநேரத்திற்கும் 60 கிலோமீட்டர் வரை பாயும் ஆற்றல் படைத்தது என்றும் அந்த கடற்கரை மக்களால் கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது இந்தோனேஷியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.