16 வயது காதலிக்கு கஞ்சா சாக்லேட்! பிறகு கதற கதற கற்பழிப்பு! இளைஞன் வெறிச் செயல்!

சென்னை மீஞ்சூர் அருகே 16 வயதுச் சிறுமிக்கு போதை சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தவனை அந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் சரமாரியாகத் தாக்கி காவல்துறையில் ஒப்படைத்தனர்.


மீஞ்சூரை அடுத்த ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவன் பாரத். அதே ஊரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியிடம் நட்பாகப் பழகி வந்தான். அந்தச் சிறுமியும் அவனது உள்நோக்கமும், நடக்கப் போகும் விபரீதமும் புரியாமல் அவனுடன் அப்பாவியாக பழகிவந்தாள்

 

தான் சிறுமியின் முழுமையான நம்பிக்கையை பெற்றாகி விட்டதை உறுதி செய்துகொண்ட அவன் தனது வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள சிறுமிக்கு வலை விரித்தான். கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சந்தித்துள்ளார்.

 

தனது இருசக்கர வாகனத்தில் அவன் ஒரு இயற்கை எழில் மிகுந்த இடத்துக்கு அழைத்துச் செல்வதாக சிறுமிக்கு ஆசை காட்டியதாகக் கூறப்படுகிறதுஅதனை நம்பி சிறுமியும் இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.

 

அவளை அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மனித நடமாட்டம் இல்லாத ஒரு தோப்புக்கு அழைத்துச் சென்ற அவன் அங்கு அவளுக்கு கஞ்சா கலந்த சாக்லெட்டை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

 

கஞ்சாவின் சுவையை அதுவரை சுவைத்தறியாத அந்தச் சிறுமி, அவன் கொடுத்த சாக்லேட் குறித்து சந்தேகப்பட வாய்ப்பில்லாத நிலையில் அந்த சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டு கிறங்கி விழுந்தாள்.

 

பிறகு என்ன ?அவனுக்கு சூழ்நிலை வசதியாகிப் போக தான் நினைத்ததை சாதித்துக்கொண்ட அவன் சிறுமியை தனது விருப்பம் போல் பாலியல் பலாத்காரம் செய்தான். பிறகு தானும் கஞ்சா உட்கொண்டு சிறிது நேரம் மயங்கிக் கிடந்தான்.

 

 அவன் பின்னர் சுதாரித்து எழுந்த நிலையில் சிறுமியை அப்படியே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றான்பள்ளியில் இருந்து சிறுமி வீடு திரும்பாததால் தேடி வந்த பெற்றொர் மற்றும் உறவினர்களுக்கு சிறுமியை பாரத் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது நேரில் பார்த்த சிலர் மூலம் தெரிய வந்தது.

 

இந்நிலையில் அவர்கள் கண்களில் சிக்கிய பாரத்திடம் அவர்கள் விசாரித்த போது அவன் அரைகுறை போதையில் நடந்ததை உளறினான்இதையடுத்து அவனை அவர்கள் அவன் சொன்ன தோப்புக்க்கு அழைத்துச் சென்ற போது அங்கு அந்தச் சிறுமி நிர்வாண நிலையில் கிடந்தாள். இதையடுத்து பாரத்தை  சரமாரியாகத் தாக்கிய அவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

அவன் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்