ஸ்கூலுக்கு சென்ற 16 வயது மாணவி மாயம்! 1 மாதத்திற்கு பிறகு பெற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்!

ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவமாகவே சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அபிநயா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவருடைய வயது 16. இவர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வருகிறார். ஜூலை மாதம் 16-ஆம் தேதியன்று பள்ளியில் பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்து விட்டுவருவதாக கூறி அபிநயா பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால்  காலையில் பள்ளிக்கு சென்ற பெண், மாலை வரையிலும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த தந்நத தன் மகளை பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத விரக்தியில் அப்பகுதி காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என்று  தந்தை புகாரளித்திருந்தார். பெண் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்திருந்த காவல்துறையினர் பின்னர் போஸ்கோ சட்டத்திற்கு  வழக்கை மாற்றினர்.

காவல்துறையினர் சிரமப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஷப்பி என்பவர் அபியை கடத்தியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து பெண்ணை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.