இமயமலை செல்ல பெற்றோர் அனுமதி மறுப்பு! உயிரோடு ஜலசமாதி ஆன 16 வயது சிறுவன்! ஆரணி பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஜலசமாதி அடைந்ததாகக் கூறி 16 வயது சிறுவனுக்கு அவரது பெற்றோர் ஜீவசமாதி அமைத்து வழிபட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆரணியை அடுத்த படவேடு ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியரான ஹரிகிருஷ்ணன். இவரது குடும்பமே தீவிர சிவ பக்தர்கள். ஆரணியிலுள்ள தனியார் பள்ளியொன்றில் பத்தாம் வகுப்பு முடித்த ஹரிகிருஷ்ணன் மகன் தனநாராயணன், படிப்பில் படு சுட்டி. பொதுத்தேர்வில் 465 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்

ஆனால் சிறுவயது முதலே ஆன்மீக சிந்தனையில் மூழ்கி வளர்ந்த தனநாராயணன் 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்பவில்லை. இதனால் வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த வெங்கட்டபுரத்தில் உள்ள சிவானந்தா பரமேஸ்வரா ஆசிரமத்தில் சிறுவனித் தந்தை தனநாராயணனை சேர்த்துவிட்டுள்ளார்.  

அங்கு தனநாராயணன் பயிற்சி பெற்று வந்த நிலையில் இமயமலை சென்று தியானம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் அதேற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் கடந்த மாதம் 24ஆம் தேதி தாம் பண்ணைக் கிணற்றில் தனநாராயணன் குதித்துள்ளார்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து பத்மாசன நிலையிலேயே தனநாராயணனின் உடலை மீட்டுள்ளனர். . இதனை அடுத்து தனது மகன் ஜலசமாதி அடைந்துவிட்டதாக கூறி ஜீவசமாதி அமைத்துள்ளார் ஹரிகிருஷ்ணன்.

இந்த விவகாரம் ஊர் முழுக்க பரவிய நிலையில், ஏராளமானோர் சமாதியை வழிபட வந்துள்ளனர். ஆனால் விவகாரம் பெரிதாவதை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.