நினைத்த காரியங்கள் நிறைவேற விநாயகரை எப்படி வணங்கும் தெரியுமா?

விநாயகப் பெருமானுடைய திருவடிவம் பக்தர்களின் மனப்பக்குவத்துக்கு ஏற்ப முப்பத்திரண்டு வகைகளாகப் போற்றப்படுகின்றன.


அவற்றுள் பதினாறு வடிவங்கள், விநாயகரின் ஷோடச வடிவங்கள் என்று போற்றப்படுகின்றன.

இந்த பதினாறு திருவடிவங்களையும் மனதில் தியானித்து, ஒவ்வொரு வடிவத்தின் பெயரையும் ஜபித்து ஆனைமுகனை தினமும் ஆராதித்து வந்தால், அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

விநாயகரின் 16 வடிவங்களையும் வழிபட்டால் விதவிதமான நற்பேறு கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது.

பாலகணபதி - தோஷங்கள் நீங்கும்.

தருண கணபதி - முகவசீகரம் ஏற்படும்.

பக்த கணபதி - இறை வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

வீரகணபதி - தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும்.

சக்தி கணபதி - உடல் ஆரோக்கியம் சீராகும்.

துவிஜ கணபதி - கடன் தொல்லை நீங்கும்.

சித்தி கணபதி – சகல செயல்களும் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி - உயர்பதவி கிட்டும்.

விக்னராஜ கணபதி - விவசாயம் செழிக்கும்.

சுப்ர கணபதி - கல்வி பெருகும்.

ஹேரம்ப கணபதி - விளையாட்டு வித்தைகளில் புகழ் கிட்டும்.

லக்ஷ்மி கணபதி – பணம், பொருள் மிகும்.

மகாகணபதி - தொழில் விருத்தியாகும்.

புவனேச கணபதி - வழக்குகள் வெற்றியாகும்.

நிருத்த கணபதி – சங்கீத, சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

ஊர்த்துவ கணபதி – இல்வாழ்க்கை மகிழ்வாகும்.