உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயற்சித்தபோது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21 வயது கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை..! 15 வயது சிறுவன் வெறிச் செயல்..! பிறகு 8வது மாடியில் இருந்து குதித்த பயங்கரம்! அதிர வைக்கும் சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பி.டெக் பட்டதாரியான இளம்பெண் ஒருவர் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது 15 வயது சிறுவன் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அவனை யார், எதற்காக வந்தாய் என அந்த பெண் கேட்க, சற்றும் எதிர்பாராமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக குத்தினான்.
இதனால் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த பெண்ணை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளான். பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தர். பின்னர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அந்த பெண்ணை கத்தியால் குத்திய சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் ரத்த காயங்களுடன் தரையில் அந்த சிறுவன் இருந்ததை அங்கிருந்தவர்கள் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த பெண்ணை குத்திவிட்டு தப்பிக்கலாம் என 8வது மாடியில் இருந்து குதித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த சிறுவன் எதற்காக அந்த பெண்ணை கத்தியால் குத்தினான். 15 வயது பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்து அனுப்பியது யார்? காதல் விவகாரத்தில் யாராவது இவனை மூளைச் சலவை செய்து அனுப்பினார்களா என்றெல்லாம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.