வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது! 150 குடும்பங்களை பசியாற வைத்த முகம் தெரியாத 80 பேர்! மதுரை நெகிழ்ச்சி!

அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு இளைஞர் தன்னார்வலர் குழு ஒன்று உதவியுள்ள சம்பவமானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


மதுரையில் தத்தனேரி என்னும் இடத்திற்கு அருகே கணேசபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கிட்டத்தட்ட 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தினக்கூலி தொழிலாளர்கள். அப்பகுதியில் கிடக்கும் பாட்டில்களை விற்று அவர்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால், இவர்களால் பாட்டில்களை கூட கடைகளில் விற்க இயலவில்லை.  அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

கல்லூரி மாணவர்கள், ஐடி துறை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து "படிக்கட்டுகள்" என்ற தொண்டு நிறுவனத்தை இயக்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை அக்கம்பக்கத்தினர் இருக்கு செய்துவந்தனர். பண்டிகை காலங்களில் இவர்கள் நலிவடைந்து அவரை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி இந்த கிராமத்தை சேர்ந்த 150 குடும்பங்களுக்கு உதவுவதற்காக தங்களுடைய நண்பர்களிடமும், உறவினர்களிடமும் உதவி கேட்டுள்ளனர். உதவி கிடைத்த பிறகு ஒரு குடும்பத்திற்கு 1000 ரூபாய் வீதம் 150 குடும்பங்களுக்கு 1,50,000 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளனர்.

நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டு அப்பகுதி மக்கள் இளைஞர்களை வாழ்த்தினர். தங்களை அரசாங்கமே கண்டுகொள்ளாத நிலையில் செய்த உதவியை என்றென்றும் மறக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். 

இந்த சம்பவமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.