நான் குளிக்கும் வீடியோ மட்டும் இல்லை! என் பாட்டி குளிக்கும் வீடியோவும்..! மானத்தை காக்க போராடிய சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்!

வேலூரில் 15 வயது சிறுமி ஒருவர் குளிக்கும் பொழுது காமக் கொடூரர்கள் சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்ததை அறிந்த அந்த சிறுமி தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னைத் தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்திலுள்ள பாகாயம் என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். சிறுமி அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருக்கும் வீட்டில் அமைந்திருக்கும் பாத்ரூமில் மேற்கூரை கிடையாது. இந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் ஆகாஷ் என்ற பூனைக் கண்ணன் கட்டிட வேலை பார்க்கும் இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 22. 

கடந்த சில தினங்களுக்கு அந்த சிறுமி தன்னுடைய வீட்டில் அமைந்திருக்கும் பாத்ரூமில் குளித்து இருக்கிறார். அவ்வாறு அவர் குளித்துக் கொண்டிருந்த பொழுது அது சிறுமிக்கு தெரியாமல் ஆகாஷ் , தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் பிளஸ் டூ முடித்த மாணவர்களின் உதவியோடு செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை அந்த மாணவிக்கு அனுப்பி வைத்து தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி இருக்கிறார். இதனை பார்த்த அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்து பதறிப்போய் இருக்கிறார். உடனே தனது செல்போனில் இருந்த அந்த குளியலறை வீடியோவை டெலிட் செய்திருக்கிறார்.

அந்த சிறுமி வீடியோவை டெலிட் செய்த பின்பும் அவர்கள் தொடர்ந்து பல முறை அதே வீடியோவை அனுப்பி உள்ளனர். இதையடுத்து அந்த வீடியோவை டெலிட் செய்து விடுமாறு ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் சிறுமி கெஞ்சி இருக்கிறாள். இருப்பினும் அந்த காம கொடுரர்கள் தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டு வந்ததால் மனமுடைந்த மாணவி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து இருக்கிறார். உடம்பில் நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்ததுடன், அலறி துடித்த அந்த மாணவியின் குரலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து மாணவியின் உடலில் இருந்த நெருப்பை அணைக்க முற்பட்டுள்ளனர்..

உடம்பெல்லாம் எரிந்து அலறித் துடித்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவியிடம் போலீசார் மரண வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் அளித்த அந்த மரண வாக்குமூலத்தில், தான் குளிக்கும்போது ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் இணைந்து ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும் மேலும் அந்த வீடியோவை வைத்து மிரட்டி தன்னை தங்களுடைய ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும் எனவும் கூறியதாக அந்த சிறுமி போலீசாரிடம் கூறி இருக்கிறார். வீடியோ வைத்து சிறுமியை தனியாக அவர்கள் அழைத்து மிரட்டியதாகவும் கூறியிருக்கிறார். அப்போது அவர்கள் கையிலிருந்து செல்போனில் அந்த சிறுமி குளிக்கும் வீடியோ மட்டுமல்லாமல், அவரது பாட்டி குளிக்கும் வீடியோக்களும் இருந்ததாக போலீசிடம் அந்த சிறுமி கூறியிருக்கிறார். மேலும் தன்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கேட்டு மிரட்டியதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனால் மனமுடைந்து மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொள்ள முற்பட்டேன் என்று இந்த சிறுமி கூறியிருக்கிறார். 

மரண வாக்குமூலம் பெற்றுக்கொண்ட போலீசார் சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான ஆகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்பு கைது செய்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முற்பட்ட தற்கு முன்பாக தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் எழுதி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.