16 வயது முதல் 15 வயது வரை..! வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம்..! போலீசை அதிர வைத்த இளம்பெண்கள்!

திருகோணமலை: இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை தலைமையக போலீஸ் பிரிவுக்கு உள்பட்ட நிலாவெளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,  இளம்பெண்களை வேலை வாங்கி தருவதாகக் கூறி, தனது வீட்டில் அடைத்து வைத்து, விபசாரம் செய்து வந்திருக்கிறார். இதனை அப்பகுதி மக்கள்  போலீசில் தெரிவிக்கவே, அங்கு சோதனையிட்ட போலீசார், 18 வயதுள்ள இளம்பெண் ஒருவரையும், 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவரையும் மீட்டனர்.

இதையடுத்து, அவ்விரு இளம்பெண்களையும் சிறார் நன்னடத்தை திணைக்களத்தில் சேர்த்த போலீசார், இவர்களை விபசாரத்தில் தள்ளிய குற்றத்திற்காக குறிப்பிட்ட 30 வயது பெண்ணை கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பேரில், அவரை நவம்பர் 11ம் தேதி நீதிமன்ற காவலில் அடைத்து, விசாரிக்கும்படி திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.