தங்கையை விருந்தாக்கிவிட்டு தப்பி ஓடிய அக்கா! 5 பேரால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


ராய்கார் மாவட்டத்தில் உள்ள கார்கோடா போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட கிராமம் ஒன்றில்தான இத்தகைய கொடூரம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட சிறுமிக்கு 15 வயது ஆகிறது. வியாழனன்று இரவு, அவரது பெற்றோர் வயலில் விளைந்த பயிர்களை காவல் செய்வதற்காகச் சென்றுவிட்டனர்.

சிறுமியும், அவரது அக்காவும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனை தெரிந்துகொண்ட உள்ளூர் இளைஞர்கள் 5 பேர் திடீரென கதவை உடைத்துக் கொண்டு, வீட்டினுள் நுழைந்தனர். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் அக்கா தப்பியோடிவிட்டார்.

ஆனால், அந்த சிறுமியை 5 பேரும் பிடித்து, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே, சிறுமியின் அக்கா, தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்து, போலீசாரை அழைத்து வந்தார். போலீசார், அந்த 5 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.