14 வயது தங்கையை பலாத்காரம் செய்த 15 வயது அண்ணன்..சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னையில் 15 வயது அண்ணன் தன்னுடைய 14 வயது தங்கையை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு 14 வயதில் தங்கை ஒருவர் இருக்கிறார். இந்த சிறுவனின் தாயார் அவருடைய முதல் கணவரை விட்டு பிரிந்து வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த 15 வயது சிறுவன் தன்னுடைய சொந்த தங்கையை பலவந்தமாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.

இதுபற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது எனவும் அப்படி கூறினால் இணையத்தில் வீடியோக்களை பரவி விடுவேன் எனவும் அவன் தன் தங்கையை மிரட்டி இருக்கிறான். இதனால் வெளியே சொல்ல முடியாத தூக்கத்தை தனக்குள்ளேயே அடக்கி வைத்திருந்த அந்த சிறுமி தன் தோழி ஒருவரிடம் தனக்கு நடந்த அனைத்தையும் பற்றி கூறி இருக்கிறாள்.

இதனையடுத்து அந்த சிறுமியின் தோழி இந்த சம்பவத்தை பற்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறியிருக்கிறார் . இதனடிப்படையில் சிறுமியின் அண்ணன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அண்ணன்-தங்கை இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க தொடங்கினர்.

விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. அதாவது அந்த பெண்ணின் அண்ணன் அவனுடைய தங்கையை கைகள் மற்றும் கால்களை கட்டி போட்டு பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளான். இது மாதிரி அவன் பலமுறை செய்திருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்துள்ளதாக அந்த சிறுவன் வாக்குமூலம் அளித்தான். இதனையடுத்து அந்த சிறுவன் போக்சோ சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டான். மேலும் அந்த சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டு மனநல ஆலோசனை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். உடன்பிறந்த தங்கையை அண்ணனே கற்பழித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.