ஒரே நேரத்தில் 4 பேர் பாலியல் வல்லுறவு! வலி தாங்காமல் பெற்றோர் முன்னிலையில் சிறுமி செய்த செயல்! திருவாரூரில் பயங்கரம்!

ஒரே நேரத்தில் 4 பேர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்த காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீத முடிவெடுத்துள்ளார்.


திருவாரூர் மாவட்டம் வடகோவனூரைச் சேர்ந்த அந்தச் சிறுமி 10ஆம் வகுப்பு தேர்வு முடித்து வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தாஸ், விஜய், அஜீத், முருகேஷ் ஆகிய 4 பேரும் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியிடம் அத்துமீறியுள்ளனர்.

இதனால் அந்த சிறுமி அலறியுள்ளார். கோபத்தில் அந்த சிறுமியை அடித்துத் துன்புறுத்தி 4 பேரும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  ஊருக்குச் சென்ற பெற்றோர் வீடு திரும்பிய நிலையில், சம்பவம் குறித்து சொல்லத் தயங்கிய சிறுமி, அவர்கள் கண்முன்னேயே மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

 பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன் போலீசாரிடம் சிறுமி கொடுத்த வாக்குமூலம் அதிர வைப்பதாக இருக்கிறது. நான்கு பேரும் உள்ளே வந்து தன்னை கொடூரமாக தாக்கி மாறி மாறி உடலுறவு செய்ததாக கூறியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறிவிட்டு அந்த அப்பாவி சிறுமி உயிரிழந்துள்ளார்.