உடம்பு ரொம்ப வலிக்குதும்மா..! கதறிய மகள் 8 மாத கர்ப்பம்..! காரணம் பெற்ற தந்தை..! மயிலாடுதுறையை உலுக்கிய சம்பவம்!

15 வயது இளம்பெண்ணை பெற்ற தந்தையே கற்பழித்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் செம்பனார் கோவிலுக்கு அருகே ஆக்கூர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணொருவர் திடீரென்று உடல்நலம் குன்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இளம் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பம் அடைந்திருப்பதை கண்டறிந்தனர். அந்த இளம்பெண் 2 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகிகள், அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தனர்‌. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

அதாவது மாணவியின் இந்த நிலைக்கு பெற்ற தந்தையே காரணம் என்று காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். உடனடியாக இளம்பெண்ணிடம் கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பெண்ணின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது ஆக்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.