15 வயது சிறுமியின் வயிற்றுக்குள் கரு..! அதிர வைத்த காரணம்..! நீதிமன்றம் போட்ட தடலாடி உத்தரவு!

15 வயது இளம் பெண்ணின் கருவை கலைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட இளம்பெண் 15 வயது நிரம்பியவர். இவர் சேலத்திற்கு சென்றிருந்த போது, வெங்கடேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உருவாகி வெறும் 15 வாரங்களே ஆன கருவை கலைத்து விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மனுவை தாக்கல் செய்திருந்தார். மேலும் இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனமானது நேற்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோரின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது என்பதால் அரசு மருத்துவ கல்லூரி நிபுணர்களே கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட நீதிபதிகள் சேலம் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு நிபுணர்களை வைத்து கருவை கலைக்க வேண்டும் என்றும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினர். மேலும் இந்த மனுவிற்கு தமிழகம் உள்துறை அமைச்சகமும், சேலம் மாவட்ட ஆட்சியரும் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.