4 மாதங்கள்..! 4 ஆண்கள்..! 15 வயது சிறுமி கர்ப்பமானதால் வெளிவந்த பகீர் உண்மை! கோவை அதிர்ச்சி!

15 வயது பள்ளி மாணவி ஒருவர் 4 மாதங்களாக 4 பேரால் கற்பழிக்கப்பட்டு வந்துள்ள செய்தியானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 15 வயதான இளம்பெண் ஒருவர் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். அதாவது, அந்த மாணவியை கடந்த சில மாதங்களாகவே அதே பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் தனித்தனியாக கற்பழித்து வந்துள்ளனர். இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். உடனடியாக அவருடைய பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்தினருடன் இணைந்து அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். 

காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கற்பழிப்பு குறித்து மாணவர்கள் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.