15 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை! 3 லட்சம் ரூபாய்க்கு விற்ற டாக்டர்கள்! அருப்புக்கோட்டை அதிர்ச்சி!

பிறந்த குழந்தையை மருத்துவ தம்பதியினர் வேறொருவருக்கு 3 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவமானது விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை என்னும் பகுதி  அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் வசித்து வருகிறார். 3 ஆண்டுகள் முன்னர் அந்தப் பெண் தன் கணவரை காதலித்து வந்துள்ளார்.

காதலித்த போது உடலுறவு வைத்து கொண்டதில் அவர் கர்ப்பம் ஆனார். கருவை கலைக்க முடியாத நிலையில் சிறுமியின் தாயார், சிறுமியை அப்பகுதியில் உள்ள சங்கர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் இந்த சம்பவமானது வெளியே தெரிந்தால் தன் குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படும் என்று சிறுமியின் தாயார் புலம்பியுள்ளார். உடனே மருத்துவர்களான வடிவேல்முருகன் மற்றும் அவரது மனைவி தமயந்தி அருப்புக்கோட்டையில் சேர்ந்த ஒரு தம்பதியிடம் 3 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளனர். அதில் ஒரு லட்ச ரூபாயை சிறுமியின் தாயாரிடம் கொடுத்துள்ளனர்.

18 வயது நிரம்பிய பின்னர் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்னர் சிறுமி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். சிறுமியின் கணவர் பெண் குழந்தை பிறந்ததால் சிறிது வேதனையில் இருந்தார். அப்போது சிறுமியின் தாயார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஆண் குழந்தையை பற்றி கூறியுள்ளார். 

ஆத்திரமடைந்த மருமகன் சங்கர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். குழந்தையின் உண்மையான தந்தை குழந்தை விற்கப்பட்ட தம்பதியை பற்றி தகவலறிந்து உள்ளார். அவர்களை சந்தித்து குழந்தையை கேட்டபோது 3 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளதால் குழந்தையை திரும்ப தர மறுத்துள்ளனர்.

இதனால் மிகவும் மனவேதனை அடைந்த இளம் தம்பதியினர் அருப்புக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர். இந்த சம்பவமானது அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.