காட்டுப்பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றிலும் ஏராளமான ஆணுறைகள்! அருகே 15 வயது சிறுவன் சடலம்! கேட்போரை உறைய வைக்கும் சம்பவம்!

விழுப்புரம் மாவட்டத்தில் ஐயன்குஞ்சரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கேசவன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் பராசக்தி. இத்தம்பதியினருக்கு சிவகுமார் என்ற மகனுள்ளார். இவருடைய வயது 15. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தான். கேசவன் வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அங்கு பணியாற்றி வருகிறார்.
நேற்று சிவகுமார் விளையாடுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் சிவகுமாரின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி அலைந்தனர். ஆனால் நள்ளிரவு வரை சிவகுமாரை தேடி கண்டு பிடிக்கவில்லை.
இந்நிலையில் காட்டுப்பகுதியில் நள்ளிரவில் சடலமாக கிடந்தார். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். சிவகுமாரின் உடலுக்கு அருகில் பல ஆணுறைகள் சிதறிக்கிடந்துள்ளன. அவ்விடத்தில் நடமாடி கொண்டிருந்த சிலரை காவல்துறையினர் விசாரித்தனர்.
அப்போது அவர்களிடம் விசாரித்ததில், அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கிராமப்புற பகுதியில் பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டிருந்தனர். அதனை சிவகுமார் கண்டுள்ளார். இந்நிலையில் அவர் ஊருக்குள் சென்று கூறிவிடுவார் என்று பயந்துக்கொண்டு அவரை கொலை செய்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
வியூகத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.