பார்த்திபனிடம் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை! வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நடிகை கைவரிசை!

நடிகர் பார்த்திபன் வீட்டில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் நடிகை ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


  சென்னை திருவான்மியூரில் நடிகர் பார்த்திபன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி சீதாவை சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டார். இதனை தொடர்ந்து மகளுடன் வீட்டில் பார்த்திபன் வசித்து வந்தார். அந்த வீட்டிலேயே பார்த்திபன் தனது அலுவலகத்தையும் வைத்துள்ளார்.

 

 திரைப்படங்கள் தொடர்பான டிஸ்கசன் உள்ளிட்ட பணிகளை அந்த அலுவலகத்தில் வைத்தே பார்த்திபன் மேற்கொண்டு வந்தார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் பார்த்திபன் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த நகைகளை சரி பார்த்த போது 60 சவரன் நகைகள் குறைந்தன.

  இதனை அடுத்து தனது வீட்டில் இருந்த 60 சவரன் நகைகள் திருடு போய்விட்டதாக நடிகர் பார்த்திபன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் வீட்டில் உள்ள நபர், அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர் தான் கொள்ளை அடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

  மேற்கொண்டு தகவல்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அந்த விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த ஜூலை மாதம் திருவான்மியூர் காவல் நிலையம் சென்ற பார்த்திபன் மேலும் 60 சவரன் நகைகளை காணவில்லை என்று புகார் அளித்தார்.

  அப்போதும் கூட வீட்டில் எவ்வளவு நகைகள் இருக்கிறது என்று கூட தெரியாமல் இருந்து விட்டு முதலில் 60 சவரன் என்றும் தற்போது 60 சவரன் என்றும் மொத்தமாக 120 சவரன் கொள்ளை போனதாக கூறுகிறீர்கள், ஆனால் வீட்டிற்குள் யாரும் அத்துமீறியதற்கான அறிகுறி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். அத்துடன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் விவரங்களையும் பார்த்திபனிடம் கோரியுள்ளனர்.

 ஆனால் பார்த்திபன் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை. இதனால் போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தவில்லை. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் காவல் ஆணையர் அலுவலகம் வந்து வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளை போனதாகவும் ஆனால் திருவான்மியூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் அளித்தார்.

  இது குறித்து விசாரித்த போது மனைவியை பிரிந்து வாழும் பார்த்திபன் கடந்த சில மாதங்களாக நடிகை ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாகவும், அந்த நடிகை அடிக்கடி பார்த்திபன் வீட்டுக்கு வந்து செல்வதும் வழக்கம் என்பது தெரியவந்தது. மேலும் அந்த நடிகை யார் என்கிற தகவலை தான் பார்த்திபன் போலீசாரிடம் தெரிவிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது-

  திருமணமாகி கணவருடன் இருக்கும் அந்த நடிகை பார்த்திபன் வீட்டிற்கு ரகசியமாக வந்து சென்றுள்ளார். எனவே அவர் அந்த நகையை திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். ஆனால் அவர் பெயரை பார்த்திபன் தெரிவிக்க மறுப்பதாகவும், தெரிவித்தால் தான் விசாரணையில் உண்மை தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.

  இதனிடையே அந்த நடிகை அப்படிப்பட்டவர் இல்லை என்றும் அவர் திருட வாய்ப்பில்லை என்றும் பார்த்திபன் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.