15 அடி நீள பாம்பு சிறுமியின் நெற்றியில் முத்தமிட்டு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பலகோடி பேரை அதிரவும் ரசிக்கவும் வைத்திருக்கிறது.
15 அடி நீள பைத்தான் பாம்பு! 12 வயது சிறுமியிடம் நெருங்கி! பதைபதைக்க வைக்கும் காட்சி!
செல்லப்பிராணிகளை வளர்க்கும் வீட்டில் அதனுடன் குழந்தைகள் விளையாடி மகிழ்வது இயல்பான ஒன்று. ஆனால், 12 வயதுமிக்க சிறுமி 15 அடி நீளமுள்ள பைத்தான் வகை பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதைப்பதைக்க வைத்துள்ளது.
சுமார் 15 அடி நீளமும், வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கிம் இந்த பாம்பு, 3 அடி வரை எழும்பி நின்று சிறுமியின் நெற்றியில் முத்தமிடுகிறது. பின், பாம்பை அந்த சிறுமி கட்டி அணைத்துக்கொள்கிறாள். இதனை வீடியோ பதிவிட்டு, வலைப்பக்கத்தில் சிறுமியின் குடும்பத்தினர் பதிவேற்றியுள்ளனர்.
இந்த வீடியோவை இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதற்கு எதிர்மறையான மற்றும் நேர்மறையான கமெண்டுகள் என வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, இதுபோன்ற ஆபத்தான செல்ல பிராணிகளை வீட்டில் வைக்க தடை செய்யவேண்டும் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
சிலர் சிறுமியின் இந்த அசாத்திய தைரியத்தை ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.