மாவோயிஸ்ட் தாக்குதலில் ராணுவ கமாண்டோக்கள் 15 பேர் வீரமரணம்! கட்சிரோலி பயங்கரம்!

மராட்டிய மாநிலம் கட்சிரோலியில், மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கமாண்டே வீரர்கள் 15 பேர் வீரமரணம் அடைந்தனர்.


மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் எல்லையில் கட்சிரோலியின் குர்கேடா என்ற இடத்தில், சி-60 என்று அழைக்கப்படும் கமாண்டோ படையைச் சேர்ந்த வீரர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்தில் 15 கமாண்டோக்கள் மற்றும் ஓட்டுனர் ஒருவர் இருந்தார்.

பேருந்து வரும் வழியில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டை பதுக்கி வைத்திருந்தனர். பேருந்து சரியாக அந்த இடத்திற்கு வந்த உடன் புதைத்து வெடிகுண்டை அவர்கள் வெடிக்கச் செய்தனர். இதில் அந்தப் பேருந்து பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

மேலும் கமாண்டோ வீரர்கள் 15 பேரும் வீர மரணம் அடைந்தனர். ஓட்டுனரும் பலியானார். தற்போது அங்கு விரைந்துள்ள பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மோடி நிச்சயம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் பழி தீர்க்கப்படுவர் என்று உறுதி அளித்துள்ளார்.