10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 14 வயது சிறுமியின் தற்போதைய நிலை?

ரஷ்யாவை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் 10 வயது சிறுவனால் கர்ப்பமாக பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஐவன் என்ற 10 வயது சிறுவன் ரஷ்யாவை சேர்ந்தவர். இவருக்கு 14 வயது கொண்ட தாரியா என்ற சிறுமியுடன் நட்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிறுமி தாரியா கர்ப்பமாக இருக்கிறார். சிறுமியின் கர்ப்பத்திற்கு ஐவன் தான் காரணம் என அவர் கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. தாரியாவை கேட்டபொழுது அவனைத் தவிர எனக்கு வேறு எந்த ஒரு ஆண் நண்பருடன் பழக்கமில்லை என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை தாரியா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவரே தன் வாயால் கூறியது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து அந்த சிறுமி மிகவும் பிரபலமான நபராக வலம் வருகிறார். மேலும் அவருக்கு பல விளம்பரப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. 14 வயது சிறுமி தாரியாவும், அவரது காதலனான ஐவனும் இணைந்து தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதை கூறியுள்ளனர். அதாவது, இந்த செய்தியை ஒரு வித்தியாசமான பாணியில் அவர்கள் இருவரும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மிகப்பெரிய பலூனில் ஆணா அல்லது பெண்ணா என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டு காணப்பட்டிருந்தது அதனை தன் கையில் உள்ள குண்டூசியால் உடைக்கும் பொழுது அதிலிருந்து நீலநிற பலூன் வந்தால் அது ஆண் குழந்தை எனவும் இளம் சிவப்பு நிறம் பலூன் வந்தால் பெண்குழந்தை எனவும் கூறினர். அதன் அடிப்படையில் ஐவன் தன் கையிலிருந்த குண்டூசியை வைத்து அந்த பெரிய பலனை உடைத்தார். உடைத்தவுடன் அந்த பெரிய பலூனில் இருந்து அதிகமான இளஞ்சிவப்பு நிறம் கொண்ட பலூன்கள் காற்றில் பறக்கத் துவங்கின.

இதன் மூலம் இவர்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க போகிறது என்ற செய்தியை மிக அழகாக தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து முத்தமிட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக மருத்துவர்கள் சிறுவனை முழுமையாக பரிசோதித்தனர் . பரிசோதனையின் போது அவனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இன்னும் வரவில்லை என்று உறுதியளித்தனர். இதனையடுத்து அவரது வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி உள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் தாரியாவின் கருத்தரிப்புக்கு நான்காம் வகுப்பு மட்டுமே படிக்கும் ஐவன் காரணமாக இருக்க இயலாது என பலரும் கூறி வருகின்றனர். 

 

இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவரை 15 வயது சிறுவன் ஒருவன் , தன்னை கற்பழித்ததாகவும் அவனால் தான் கருவுற்ற*தாகவும் கூறியிருக்கிறார். இதனை வெளிஉலகிற்கு சொல்லாமல் மறைப்பதற்காகவே தாரியா, ஐவன் மீது பழி சுமத்தியதாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.