அடுத்து என்ன நடக்கப்போகிறது? 2019ல் கொரோனாவை துல்லியமாக கணித்த ஜோதிட சிறுவன் கூறிய திடுக் தகவல்!

கொரோனாவை பற்றி எட்டு மாதத்திற்கு முன்பே கணித்த சிறுவன் அபிக்யா ஆனந்த் தற்போது மே 29 உடன் இந்த வைரஸ் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று கூறியிருக்கிறார்.


இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் ஆவார். இவர் சிறுவயதிலேயே வானவியல் சாஸ்திரம், ஜோதிடம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். தன்னுடைய துல்லியமான கணிப்புகள் மூலம் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் இந்த சிறுவன்.

இந்த சிறுவன் தனக்கென்று யூடியூப் சேனல் ஒன்றை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்து நடத்தி வருகிறார். அதில் ஜோதிடம் மற்றும் வானவியல் சம்பந்தமான செய்திகளையும் தன்னுடைய நேயர்களுக்கு பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவருடைய வீடியோ விற்காக பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிறுவன் அபிக்யா ஆனந்த் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதியதாக வீடியோ ஒன்றை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டார். அந்த வீடியோவில் 2019 ஆகஸ்ட் மாதம் முதல் 2020 ஏப்ரல் வரை மிகப்பெரிய வைரஸ் தொற்று கொண்டு உலகையே அச்சுறுத்த காத்துக்கொண்டிருக்கிறது என கூறினார். 

செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை, சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருவதால்தான் இந்த நோய்த்தொற்று உலகை அச்சுறுத்தும் என அந்த சிறுவன் கூறியிருக்கிறார். இது மிகவும் அரிய வகை கிரகசேர்க்கை என்பதால்தான் உலகில் இம்மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என அந்த சிறுவன் எச்சரித்திருக்கிறார். 

ராகுவும் சந்திரனும் ஒன்றாக சேர்வதால் உலகில் மிகப் பெரிய பிரச்சனைகள் உருவாகக்கூடும். சந்திரன் நீர் கிரகம் என்பதால் எச்சில் மூலம் பரவக்கூடிய நோய் தொற்றாக இந்த வைரஸ் தொற்று இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த சிறுவன் கணித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ராகு நோய்களை அதிகமாக பரப்பும் கிரகமாகும். 

ஆகையால் சந்திரனும் ராகுவும் ஒன்றாக சேரும் பொழுது எச்சில் மூலமாக அதிகமாக பரவக்கூடிய நோய்கள் அதிகரிக்கும் என்ற சிறுவன் கூறியிருக்கிறார். வைரசுக்கும் மனிதனுக்கும் இடையேயான போர் இந்த கால கட்டத்தில் நடைபெற போகிறது என அவர் எச்சரித்திருக்கிறார். அதேபோல் இந்த வைரஸ் தொற்றினால் உலக நாடுகளில் பணக்கார நாடுகளாக கருதப்படும் பல நாடுகள் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க கூடும் எனவும் அவர் கணித்துக் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது இதனை அடுத்து இந்த வைரஸின் தொற்று எப்போது அதன் வீரியத்தை இழக்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலாக சிறுவன் தற்போது பல தகவல்களை கூறியிருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும். பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்து வரும் மே மாதம் 29ம் தேதியில் முடிவுக்கு வரும் என்று அந்த சிறுவன் கூறியிருக்கிறார். இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் இந்த சிறுவன் இந்த வைரஸ் தொட்டியில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரு வழிமுறையை கூறியிருக்கிறார்.

அதாவது சூடான நீரில் மஞ்சள், தோல் சீவப்பட்ட இஞ்சி, எலுமிச்சை சாறு , துளசி ஆகியவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டுமாம். அடுப்பிலிருந்து இறக்கி வைத்த அந்த நீரில் இருந்து வரும் ஆவியை போர்வையை போர்த்திக் கொண்டு வேதி பிடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதன் மூலம் அந்த சூடான நீரில் இருந்து வெளிவரும் ஆவி மூக்கு துவாரத்தின் வழியே உடலுக்குள் சென்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை புத்துணர்ச்சியையும் இது வழங்கும் எனவும் அந்த சிறுவன் கூறியிருக்கிறான். பின்னர் சூரிய ஒளியில் நாம் நிற்பதன் மூலமாகவும் இந்த வைரஸ் தொற்றினால் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அந்த சிறுவன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.