குடும்பத்தில் பெரும் கஷ்டம்! பிழைக்க வெளிநாடு சென்ற இளம் பெண்! 14 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக திரும்பும் பகீர் சம்பவம்!

குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டுக்கு சென்ற பெண் உயிரிழந்து தாயகம் திரும்பிய சம்பவமானது கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் கொல்லம் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட கொட்டரக்கார என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயா விஜயராஜன். இவருடைய வயது 53. இவருடைய கணவரின் பெயர் விஜயராஜன். இத்தம்பதியருக்கு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. திருமணமான புதிதில் விஜயராஜன் வெளிநாட்டிற்கு சென்று பணிபுரிந்து வந்தார். ஒருகட்டத்தில் உடல்நிலை மிகவும் மோசமான தால் அவர் தாயகம் திரும்பினார். குடும்ப சூழ்நிலையை சமாளிப்பது மற்றும் பணத்தேவையை பூர்த்தி செய்வது ஆகிய நோக்கங்களுக்காக விஜயா விஜயராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலில் ஒரு பள்ளியில் குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

2013ம் ஆண்டிலேயே அவருடைய விசா காலாவதி ஆகிவிட்டது. அதன் பின்னர் அதனை புதுப்பிக்காமல் இஸ்ரேல் நாட்டிலேயே சட்டத்திற்கு புறம்பாக வாழ்ந்து வந்துள்ளார். சென்ற ஆண்டு தன்னுடைய குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டவர் தன்னுடைய உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். அதற்கு விஜயராஜன் கேரளா வந்துவிடு என்று கூறிய போதிலும் அவர் தாயகம் திரும்பவில்லை.

4 மாதங்களுக்கு முன்னர் ஜெயாவின் உடல்நிலை மிகவும் மோசமானதாக அவருடைய குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். குடும்பத்தினர் தங்களுடைய சொத்துக்களை விற்று இஸ்ரேல் நாட்டிற்கு பணம் அனுப்பி வைத்தனர். 

இருப்பினும் சென்ற  வெள்ளிக்கிழமை அன்று ஜெயா இறந்துவிட்டதாக கேரளாவில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அவருடைய உடலை இந்தியாவிற்கு எடுத்து வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவமானது கொள்ளிடம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.