20 நிமிடங்கள் விடாமல் இருமல்! திடீரென வெடித்த தொண்டைக் குழாய்! ரத்த வெள்ளத்தில் சிறுமிக்கு ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ந்த டாக்டர்கள்!

மான்செஸ்டர்: இருமிய போது ரத்த வாந்தி வந்ததால் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.


கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் ஜேட் ஓவன்ஸ். 14 வயதான இவர், குதிரையேற்ற வீராங்கனையாக  வலம் வந்தவர் ஆவார். இவருக்கு DKA எனப்படும் டயாபடிக் கீட்டோஅசிடோசிஸ் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு உடல்நலம் தேறி , அந்த பாதிப்பில் இருந்து சமீபத்தில்தான் மீண்டுள்ளார். ஆனாலும், கீட்டோஅசிடோசிஸ் பாதிப்பு காரணமாக, அவரது உடல் மிகவும் பலவீனமடைந்திருந்தது.  

இதனால், திடீரென அவரது நுரையீரலில் பூஞ்சைக் கட்டிகள் பரவ தொடங்கியுள்ளன. மியூகர்மயோசிஸ் எனும் பெரிய பாதிப்பாக இது மாறியுள்ளது. இதற்காக மருத்துவ சிகிச்சை அவர் பெற்று வந்தாலும், சமீபத்தில் கடுமையான இருமல் ஏற்பட்டுள்ளது. இதில், அவரது தொண்டைக்குழாய் வெடித்து, ரத்த வாந்தி எடுக்க தொடங்கினார்.

சிறிது நேரத்தில் உடல் முழுக்க ரத்த காடாகக் காட்சியளிக்க, உடலில் ரத்தம் ஏதுமின்றி அவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்த்தாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவிக்கவே, ஓவன்ஸ் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.  

குதிரை சவாரியில் ஈடுபடும்போது அவருக்கு, இந்த பூஞ்சை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஏற்கனவே பலவீனமான உடம்பு என்பதால், நோய் பாதிப்பு தீவிரமடைந்திருக்கலாம் என்றும், டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 14 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.