எலி மருந்து கலந்த தின்பண்டம் சாப்பிட்ட சிறுமி! பிறகு நேர்ந்த கொடூரம்!

இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கங்கய்யா, கலைக்கூத்தாடி.


இவர் தனது அண்ணன் மகள் பாலம்மாள்(14) என்பவரை தனது வீட்டில் வளர்த்து வந்தார். இந்நிலையில், இவரது வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததாம். இதனால், எலிகளை ஒழிக்க கடந்த 2ம் தேதி இரவு தின்பண்டத்தில் எலிமருந்து கலந்து வைத்தார்.

இதையறியாத பாலம்மாள் அந்த தின்பண்டத்தை எடுத்து சாப்பிட்டாராம். சிறிதுநேத்தில் மயங்கி விழுந்த அவரை கங்கய்யா வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, நெமிலி போலீசார் வழக்குப்பந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.