14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவன்! டீன் ஏஜ் காதல் விபரீதம்!

14 வயது சிறுமி ஒருவர், எதிர்பாராவிதமாக, ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேபாளம் நாட்டின் ரூபி வேலி பகுதியைச் சேர்ந்த பபித்ரா தாமங் (14 வயது), ரமேஷ் தாமங் (13 வயது) ஆகிய 2 பேரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இதில், ரமேஷ் 5வது கிரேடும், பபித்ரா 4வது கிரேடும்  படித்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் மிக நெருக்கமாக பழகியதில், பபித்ரா, எதிர்பாராவிதமாக கர்ப்பமாகியுள்ளார். சமீபத்தில், பபித்ராவுக்கு, ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதையடுத்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி, மாவட்ட நிர்வாகத்திடம் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால், இருவருக்கும் மைனர் வயது என்பதால், திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று கூறி, மாவட்ட நிர்வாகம் கைவிரித்துவிட்டது. அதேசமயம், அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு, இரண்டு கைகளிலும் நடுவிரல் இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடாகும். எனவே, அந்த குழந்தையை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காத போதிலும், தாமங் சமூக வழக்கத்தின்படி, ஒரு ஆண், ஒரு பெண்ணை மனைவியாக நினைத்துவிட்டாலே போதும். எத்தனை வயதான பிறகும் திருமணம் செய்துகொள்ளலாம். இங்கோ, குழந்தையே பெற்றுவிட்டார்கள். இதனால்,20 வயது கடந்த பின், சட்டப்படி திருமணம் செய்துகொள்ள தடையில்லை என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.