நம்பி அனுப்பிய தாய்! 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்!

14 வயது இளம்பெண்ணை கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூரில் தாராபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. தாராபுரத்தில் அருகே பொட்டிக்காம்பாளையம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெண் ஒருவர் தன்னுடைய 14 வயது மகளுடன் வசித்து வந்தார்.

இதே கிராமத்தில் சுப்பிரமணி என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். அருகிலுள்ள கட்டிட வேலைக்கு ஆள் வேண்டும் என்று 14 வயது மகளின் தாயிடம் கேட்டுள்ளார். சுப்ரமணியை நம்பி தன்னுடைய பெண்ணை சித்தாள் வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இரவு நெடுநேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெண்ணின் தாய், தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுமியை தேடி பல இடங்களில் அலைந்தனர். அப்போது அந்த சிறுமி நேற்று மதியம் திருப்பூர் பேருந்து நின்று கொண்டிருந்ததாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. உடனடியாக காவல்துறையினர் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு அந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, சுப்பிரமணி தன்னை கற்பழித்ததாக அந்த சிறுமி கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் சுப்பிரமணியை தேட தொடங்கினர். அப்போது சுப்ரமணி தாராபுரம் காவல் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதை காவல்துறையினர் அறிந்தனர்.

உடனடியாக தாராபுரம் பேருந்து நிலையம் சென்ற காவல்துறையினர் சுப்பிரமணியை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.