14 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் கடவுள் தான்..! விசாரணையின் போது வெளியான திக் திடுக் தகவல்கள்! அதிர்ச்சி சம்பவம்!

14 வயது சிறுமியை வளர்ப்பு தந்தை கர்ப்பமாக்கிய சம்பவமானது தாய்லாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாய்லாந்து நாட்டில் புரிராம் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்கு உட்பட்ட 14 வயது சிறுமி ஒருவர் திடீரென்று தன்னுடைய வீட்டில் 2 நாட்களுக்கு முன்னர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்‌. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டனர்.

பரிசோதனை முடிவில் சிறுமி 2 மாதங்கள் கர்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் சிறுமியிடம் கேட்டபோது, தன்னை கடவுள் கர்ப்பமாக்கினார் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், சிறுமியின் வளர்ப்பு தந்தையை தான் இதற்கு காரணம். ஏற்கனவே 15 வயதான சிறுமியின் சகோதரியையும் அவர்தான் கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். சிறுமியின் தாயார், தனக்கு இந்த செய்திகள் குறித்து எதுவும் தெரியாது என்றும், தெரிந்திருந்தால் முன்னதாகவே அவரை காவல்துறையினரிடம் காட்டிக்கொடுத்து இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் சிறுமியின் வளர்ப்பு தந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், "நான் அந்த சிறுமியுடன் உடலுறவு கொண்டது உண்மைதான். ஆனால் அப்போது என்னுடைய உடலுக்குள் கடவுள் புகுந்தார். கடவுள் தான் என்னை அவ்வாறு செய்ய வைத்தார்" என்று கூறி அதிர வைத்தார். 

சிறுமியின் வளர்ப்பு தந்தை மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழக்கை காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகின்றனர் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த சம்பவமானது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.