சிறுவனின் தொண்டைக்குள் அந்த பொருள்! கை விரித்த டாக்டர்கள்! எண்டோஸ்கோபி மூலம் தெரிய வந்த அதிர்ச்சி!

சிறுவன் ஒருவன் விசிலை முழுங்கிய சம்பவமானது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் திலீப்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் நாகஜோதி. இத்தம்பதியினருக்கு கௌதம் மற்றும் அஸ்வின் பாண்டியன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

அஸ்வின் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் அஸ்வின் பரிசு வாங்கியுள்ளான். அந்த பரிசில் ஒரு விசில் கிடைத்துள்ளது.

அந்த விசிலை ஊத முயற்சித்த போது, அஸ்வின் அதை தவறுதலாக விழுங்கியுள்ளான். 

இந்நிலையில், அஸ்வினி அவனுடைய பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர்களால் விசிலை எளிதாக வெளியே எடுக்க இயலவில்லை.

உடனடியாக எண்டோஸ்கோப்பி ஸ்கேன் செய்து விசிலிருக்கும் இடத்தை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர் டியூப் மூலம் நெடுநேரமாக போராடி விசிலை வெளியே எடுத்தனர். தற்போது அஷ்வின் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..