ஒரே IMEI நம்பருடன் 13,500 செல்போன்கள் தயாரிப்பு! VIVO நிறுவனத்தின் பகீர் மோசடி..! பதிவானது FIR..!

ஒரே ஒரு ஐஎம்இஐ எண்ணில் 13,500 செல்போன் எண்கள் செயல்பட்டு வருவதாக விவோ நிறுவனத்தின் மீது மீரட் சைபர்கிரைம் காவல்துறையினர் புகாரளித்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற நகரம் அமைந்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் விவோ நிறுவனத்தில் செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய செல்போன் அட்டைப்பெட்டியில் குறிப்பிடப்பட்டிருந்த ஐஎம்இஐ எண்ணும், செல்போனின் ஐஎம்இஐ எண்ணும் வேறுபட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

உடனடியாக இதுகுறித்து விவோ சேவை மையத்தை அணுகியுள்ளார். தனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு வழக்குப்பதிவு செய்து  விசாரணையை தொடங்கியுள்ளார். 5 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில் ஒரே ஐஎம்இஐ எண்ணில் கிட்டத்தட்ட 13,500 மேலாக விவோ கைபேசிகள் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து அவர் உடனடியாக விவோ சேவை மையம் மற்றும் விவோ செல்போன் தயாரிப்பு நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையான ஐஎம்இஐ எண் இல்லாமல் செல்போன்கள் விற்கப்படுவது, மற்றும் ஐஎம்இஐ எண்ணை முறையில்லாமல் பயன்படுத்துவது ஆகிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.