பெற்ற மகளை தாயாக்கிய கொடூர தந்தை..! மருத்துவமனையில் அரங்கேறிய பகீர் சம்பவம்! நெஞ்சை உலுக்கிய பதைபதைப்பு!

13 வயதான இளம்பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளம்பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் அவரின் தந்தை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


பிரேசில் நாட்டில் லூனா கெட்லன் என்ற 13 வயது சிறுமி வயிறு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த இளம் பெண்ணின் உடலில் போதுமான ரத்தம் இல்லாத காரணத்தினால் இனிமேலும் குழந்தையை சுமப்பது மிகக் கடினம் என்று மருத்துவர்கள் முடிவு செய்து அந்த இளம் பெண்ணை பிரசவிக்க செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் பிரசவத்திற்கு பிறகு நுரையீரல் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டதோடு அந்த சிறிய இளம் பெண்ணுக்கு ரத்த அழுத்தமும் குறைவாக இருந்ததால் அந்தப் பெண் சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் லூனாவின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று விசாரித்தபோது அவர் தந்தை தான் காரணம் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. மீன்பிடிக்க தனது தந்தையுடன் சென்ற போது அவரது தந்தை அந்த இளம்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியது. 

இதனிடையே லூனாவிற்கு குழந்தை பிறந்ததை அறிந்த அவரது தந்தை தலைமறைவாகி இருந்தார். போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் தலைமறைவாக இருந்த அந்த இளம்பெண்ணின் தந்தை பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.