நான் பால் கொடுக்க போனப்ப..! 13 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனால் ஏற்பட்ட விபரீதம்! பதைபதைப்பு சம்பவம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து கல்லூர் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர் ராஜசேகர் 22, இவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வேளையில் இவர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளார்.அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 13 வயது பள்ளி மாணவி ஒருவர் விளையான்டு முடித்துவிட்டு வீட்டிற்கு பால் வாங்குவதற்காக பால் சொசைட்டிக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த மாணவியை பார்த்துக்கொண்டிருந்த ராஜசேகர் பால் வாங்கி விட்டு திரும்பி வரும்போது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மாணவியின் கையை பிடித்து இழுத்தும் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதையடுத்து மாணவியிடம் பாலியல் முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதையடுத்து மாணவி அவரிடம் இருந்து தப்பிச் சென்று இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து உடனே ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதற்கு முன்னர் ராஜசேகர் என்பவரை ஊர்மக்கள் ஒன்றுகூடி திரண்டு தர்ம அடி கொடுத்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் ராஜசேகர் என்பவரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.