13 வயது சிறுமி..! சோளக் காட்டுக்குள் தூக்கிச் சென்ற அரவிந்த்..! பிறகு ஒருவன் மாறி இன்னொருவன்..! கோவை திகுதிகு!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே 13 வயது பள்ளி சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அரவிந்த் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையம் என்ற ஊர் அமைந்துள்ளது . இந்த ஊரில் அரவிந்த் (வயது 23) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் இந்த பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் இருக்கும் அதே பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இன்னிலையில் அரவிந்த் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அந்த சமயத்தில் அந்த சிறுமி தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்திருக்கிறார். அதனை பார்த்த உடனே அந்த சிறுமியை அழைத்திருக்கிறார். அந்த சிறுமியும் பக்கத்து வீட்டு அண்ணா தானே என்று நம்பி சென்றிருக்கிறார். உடனே அந்த சிறுமியை அரவிந்த் வலுக்கட்டாயமாக யாருக்கும் தெரியாமல் சோளக்காட்டுக்கு தூக்கி சென்றிருக்கிறார். 

அரவிந்த் அந்த சிறுமியை சோளக்காட்டுக்கு தூக்கிச் சென்றதை காளிதாஸ் என்பவர் பார்த்து இருக்கிறார். உடனே அவரை பின்தொடர்ந்து சோளக்காட்டு சென்றிருக்கிறார். பின்னர் அந்த சோளக்காட்டில் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய இருவரும் துணிந்து இருக்கின்றனர் . இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி மிகுந்த கூச்சலிட்டு இருக்கிறாள். 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சோள காட்டிற்கு ஓடி வந்திருக்கின்றனர். உடனே அந்த இருவரிடமிருந்து பத்திரமாக சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டனர் . பொதுமக்கள் வருவதை பார்த்த அரவிந்தும் காளிதாசும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த சிறுமி அங்கிருந்த அதனுடைய பெற்றோர் மற்றும் மக்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறியிருக்கிறார். 

இதனைத்தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர் அருகிலிருந்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை விசாரித்த காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக அரவிந்து மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.