13 வயதில் 100 புத்தகங்கள் எழுதிய சிறுவன்! மலைக்க வைக்கும் சாதனைக்கு சொந்தக்காரர்!

படிப்பு, புத்தகம் என்றாலே அனைவருக்கும் பொதுவான கருத்து பிள்ளைகளுக்கு பிடிக்காது என்பது தான் அதிலும் சில பிள்ளைகள் வேண்டுமென்றே படிப்பை புறம் தள்ளுவதும் உண்டு.


இதற்கிடையில்  உத்திரபிரதேச மாநிலத்தின் 13 வயது சிறுவன் மிரிகேந்திர ராஜ் தனது வயதிற்க்கும் மீறிய பல சாதனைகள் மூலமாக பிரபலமாகியுள்ளார். மிரிகேந்திர ராஜ் தனது 6 ஆம் வயதில் வாசிப்பு மற்றும் புத்தகங்கள் மீதான அதிக ஆர்வத்தின் காரணமாக, புத்தகங்கள் வாசிக்க துவங்கி பின்னர் எழுதவும் முனைந்து உள்ளார்.

ஆஜ் கா அபிமன்யூ என்ற புணை பெயரில் தனது எழுத்தை துவங்கியவர், சரியாக 13 வயதில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட பல தலைவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்.எழுதி சாதனை படைத்துள்ளார்.

அவரது திறனை ஊக்குவிக்க லண்டன் உலக சாதனை பல்கலைக்கழக சார்பாக முனைவர் பட்டமும் பெறவுள்ளார், மேலும் தனது எதிர்காலத்தில் இன்னமும் எழுத வேண்டும் என்பதே ஆசை என மிரிகேந்திர ராஜ் கூறுவது பெரும் வியப்பை கொடுத்துள்ளது.