13 வயது சிறுமியை சிறுவர்கள் 4 பேர் சேர்ந்து மாறி மாறி பாலியல் வல்லுறவு!

13 வயது சிறுமி, மைனர் சிறுவர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையின் வடக்கே உள்ள புறநகர்ப்பகுதியான மலாட் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட சிறுமியை அவரது நண்பர்கள் லஹுகார் தாம்நகருக்கு, பார்ட்டி ஒன்றில் பங்கேற்க அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே, சிறுமியின் நண்பர்களுடன், மேலும் 3 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பார்ட்டியில் எல்லோரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, இந்த சிறுமிக்கு, குளிர்பானம் கொடுத்துள்ளனர். 

ஆனால், அதில் மயக்க மருந்து கலந்திருந்துள்ளது. இதைக் குடித்ததும் சிறுமி மயங்கிவிடவே, அவளை தனிமைப்படுத்திய அந்த 6 பேரும் பலமுறை தொடர்ச்சியாக, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, சுய நினைவு திரும்பிய அந்த சிறுமி நள்ளிரவில் வீட்டிற்கு வரவே, அவரது தாய், கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். 

ஆனால், சிறுமி எதுவும் பேசாமல், அதிர்ச்சி அடைந்தவளைப் போல இருந்துள்ளார். மறுநாள் காலை விடிந்ததும், சிறுமிக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன்பேரில், டாக்டருக்கு அழைத்துச் சென்றபோது, தன்னை 6 பேர் பலாத்காரம் செய்ததாகக் கூறியிருக்கிறார். அதிர்ந்துபோன பெற்றோர் உடனடியாக, போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப் பதிந்த போலீசார், சம்பந்தப்பட்ட 6 பேரை உடனடியாகக் கைது செய்தனர். ஆனால், இதில், 4 பேர் மைனர் வயது சிறுவர்கள் என்பதால், என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசித்து வருவதாக, போலீசார் குறிப்பிட்டனர்.