வயிறு வலிக்குதும்மா..! துடியாய் துடித்த கோவை சிறுமி..! வயிற்றுக்குள் இருந்த அரைக்கிலோ பொருளை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

13 வயது சிறுமியின் வயிற்றில் தலைமுடி, ஷாம்பூ கவர் முதலியன இருந்துள்ள காட்சி மருத்துவர்களை பேரதிர்ச்சி அடைய செய்துள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிற்று வலிக்கான மாத்திரைகளை சாப்பிட்ட போதும், வலி குறையவில்லை. 

சென்ற வாரம் வலி மிகவும் அதிகமானதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதலில் அவருடைய பரிசோதிப்பதற்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். 

அப்போது அவருடைய வயிற்றில் சிறிய கட்டி போன்று ஏதோ இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் அதனை வெளியே எடுப்பதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

அப்போது அந்த சிறுமியின் வயிற்றில் அரைகிலோ தலைமுடி, தலை குளிக்க பயன்படுத்தப்படும் ஷாம்பூ கவர் முதலியன இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிகுந்த சிரமத்திற்கு பின்னர் மருத்துவர்கள் அவருடைய வயிற்றிலிருந்து தலைமுடி மற்றும் ஷாம்பூ கவரை வெளியே எடுத்தனர்.

இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், தற்போது அந்த சிறுமி எந்தவித உடல்நல குறைவுமின்றி நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.