13 வயது கால்பந்து வீரரின் நேர்மை! குவியும் பாராட்டுகள்! அஸ்வினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

13 வயது இளம் கால்பந்து வீரரின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை கண்டு வியந்து பல்வேறு தரப்பினரும் சமூக வலை தளங்களில் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.


galatasaray அணி மற்றும் istanbulspor  அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் galatasaray அணியை சேர்ந்த பெக்கனஸ் என்ற வீரருக்கு நடுவர் பெனால்டி ஷாட் அடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.எதிரணியின் வீரர் ஒருவர் பந்தை தன் வசம் எடுக்க முயன்றபோது பெக்கனஸ் என்பவர் கிழே விழுந்தார். இதனால் galatasaray அணி வீரர் பெக்கனஸ் பெனால்டி ஷாட் அடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அனால் ரி-பிலேவில் பார்க்கும் பொது போது தானே தடுமாறி விழுந்ததை உணர்ந்த பெக்கனஸ் , வேண்டுமென்றே பெனால்டி ஷாட் அடிக்கும் போது பந்தை கோலுக்கு வெளிப்பகுதியில் அடித்து தனது வாய்ப்பை வேண்டுமென்றே வீணடித்தார். இதனை கண்டு வியந்து எதிரணியின் கோல்  கீப்பர் கை தட்டி அவரை பாராட்டினார். galatasaray அணி வீரர் பெக்கனஸின் நேர்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை கண்டு பல்வேறு தரப்பினரும் சமூக வலை தளங்களில் அவரின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

ஒரு சிலர் இந்த செயலையும் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பட்லரை அவுட் செய்த விதத்தையும் ஒப்பிட்டு அஷ்வினை சமுக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.