13 வயது சிறுமி ஓட்டிய கார்! சாலையில் அமர்ந்திருந்த முதியவரை இடித்து தள்ளிய பயங்கரம்! திருப்பூர் திகுதிகு!

மைனர் சிறுமியொருவர் குடியிருப்புக்குள் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூரில் புதுராமகிருஷ்ணாபுரம் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் 13 வயதே நிரம்பிய சிறுமியொருவர் தன் உறவினர் ஒருவரின் உதவியுடன் கார் பயின்றுள்ளார். உறவினரின் அறிவுரைகளை கேட்டு அந்த சிறுமி காரை இயக்கி வந்துள்ளார். அப்போது பிரேக்கிற்கு பதிலாக அந்த சிறுமி ஆக்சிலரேட்டரை அமுக்கியுள்ளார்.

இதனால் கார் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த காந்திமணியன் என்ற முதியவர் மீது கார் மோதியுள்ளது. குறைவான வேகத்தில் கார் ஓட்டப்பட்டதால் அவருக்கு எந்தவித அபாயமும் ஏற்படவில்லை. இருப்பினும் அவருடைய நெஞ்சு மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

மேலும் சிறுமியின் தந்தை மருத்துவசெலவு முழுவதையும் தாமே ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். காந்திமணியன் சிறுமியின் எதிர்காலம் கருதி காவல் நிலையத்தில் புகாரளிக்காமல் விட்டுவிட்டார். 

இந்த சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.