13 வயது சிறுவனின் வயிற்றுக்குள் மிகவும் ஆபத்தான பொருள்..! பெருங்குடலுக்குள் நுழையும் வரை காத்திருந்த டாக்டர்கள்! X-rayவில் அவர்கள் கண்ட காட்சி!

13 வயது மாணவன் ஒருவன் காம்பஸ் நுனிப்பகுதியை விழுங்கிய சம்பவமானது சீன நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனா நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஒன்று குவாங்டாங். இந்த மாகாணத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் சியாவோ யூ என்ற 13 வயது மாணவன் படித்து வந்துள்ளார். கணித வகுப்பில் எதிர்பாராவிதமாக அவர் காம்பஸின் நுனிப்பகுதியை விழுங்கியுள்ளார். உடனடியாக கணித ஆசிரியர் மாணவனின் பெற்றோரிடம் நிகழ்ந்தவற்றை கூறி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்டில் வயிற்றில் குறித்த பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த பொருள் வயிற்றின் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். சிக்கியுள்ள பொருள் கூர்மையானது என்பதால் மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.

தீவிர பரிசோதனை ஊசி சிறுகுடலில் சிக்கியிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பெருங்குடலிற்கு ஊசி வருவதற்காக 3 நாட்களாக காத்திருந்து மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டு ஊசியை வெளியே எடுத்தனர். இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாணவன் மிகவும் அதிர்ஷ்டக்காரன். வயிற்று வலி அல்லது உடலில் வேறு எந்த பாதிப்பும் இல்லாமல் ஊசி வெளியே எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு முறைகளை ஆலோசித்த பிறகு ஊசியை வெளியே எடுப்பதற்கு அறுவை சிகிச்சைதான் சிறந்தது என்ற முடிவை எடுத்தோம். அதன் பின்னர் அறுவை சிகிச்சை சிறப்பாக செய்து ஊசியை வெளியே எடுத்தோம்" என்று கூறினார்.

இந்த செய்தியானது அந்நாட்டு ஊடகங்களில் வைரலாகி வருகிறது.