13 வயது சிறுமியிடம் டூ வீலர்..! பைபாஸில் ஆபத்தான பயணம்..! பெற்றோர் அலட்சியத்தால் நேர்ந்த பயங்கரம்!

இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற 13 வயது சிறுமி லாரி மோதி உயிரிழந்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மதுரையில் வலையங்குளம் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெயிண்ட் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவருடைய மகளின் பெயர் திவ்யா. திவ்யாவின் வயது 13. இவர் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை தன்னுடைய தந்தையின் கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து டி.வி.எஸ் எக்ஸ் எல் வாகனத்தில் சென்று‌ கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி திவ்யாவின் மீது மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சியில் திவ்யா லாரியின் பிடியில் சிக்கி கொண்டார். 100 மீட்டர் தூரம் வரை தரதரவென இழுத்து செல்லப்பட்ட திவ்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். திவ்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து பெருங்குடி நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பெருந்துறை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் மாற்றுப்பாதையாக பாலம் ஒன்றை அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கைகள் தெரிவிக்கின்றனர். உரிய நம்பிக்கை கிடைக்கும் வரையிலும் திவ்வியாவின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். 

இந்த சம்பவத்தினால் பெருந்துறையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 13 வயது சிறுமியிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்ததே விபத்து ஏற்படுவதற்கான முதன்மை காரணம் என்று சில பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் பெருந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.