மேலவளவு விவகாரத்தில் 13 பேர் விடுதலை! நீதிமன்றம் கண்டிக்கிறது. எடப்பாடி, ஸ்டாலின், திருமாவளவன் கப்சிப்!

ஏற்கெனவே பஸ்ஸில் மூன்று பேரை எரித்து கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்தது அ.தி.மு.க. அரசு. அதற்கே மக்களிடம் கடும் எதிர்ப்பு வந்தது, ஆனாலும் அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.


இந்த நிலையில் மேலவலவு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 13 பேரையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்துள்ளது. கொலை செய்தவர்களுக்கு எப்படி நன்னடத்தை விதி பொருந்தும் என்பதுதான் ஆச்சர்யம்.

கொலையாளிகளை ஏன் விடுதலை செய்தீர்கள் என்று நீதிமன்றம் தமிழக அரசை கேட்டிருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுபற்றி கேள்வி கேட்டால், ‘இதற்கென ஒரு அமைச்சர் இருக்கிறார், அவரிடம் முழுமையாக கேட்கலாம்’ என்று சொல்லி நழுவி விடுகிறார்.  

தருமபுரி பஸ் எரிப்பில் 3 மாணவிகள் இறந்த வழக்கு, மேலவளவு பிரச்சனையில் 7 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு என இரண்டு வழக்குகளிலும் தண்டனை பெற்று சிறையில் இருந்தவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

குற்றவாளிகளை இவ்வளவு அவசரமாக விடுதலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர்களால் நாட்டுக்கு என்ன நன்மை? என்று நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. ஆனால் இதற்கு அ.தி.மு.க. அரசோ, அமைச்சர்களோ எதுவும் பதில் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தை எழுப்பி தமிழக மக்களை திசை திருப்பிவிட்டார்கள்.

13 பேரை ஏன் விடுதலை செய்தீர்கள் என்று தி.மு.க. கேட்கவில்லை, திருமாவளவனும் கேட்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியான தகவல். காயத்ரி ரகுமாமுக்கு எதிராக போராடும் விடுதலை சிறுத்தைகள் இந்த விவகாரத்துக்காக போராட்டம் செய்யாமல் அமைதியாக இருப்பது ஏன்? காயத்ரிக்கு வீடியோ வெளியிட்டு விளையாடும் திருமா இதற்கு ஏன் போராட்டம் அறிவிக்கவில்லை.

சொல்லுங்கள் திருமா?